Site icon Tamil News

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை!

இலங்கையின் பொருளாதாரத்தின் மீட்சியை வருடத்தின் இரண்டாம் பாதியில் காணலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திலும் அவ்வாறே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி பெறுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

“முந்தைய சூழ்நிலை மற்றும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொள்ளும் போது, தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. மேலும், எரிபொருள் மற்றும் எரிவாயு விலையும் இப்போது குறைந்து வருகிறது. அரசாங்கம் இப்போது பல இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில் எதிர்காலத்தில் மேலும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த செயற்பட்டு வருகிறது.

“அனைத்து தரவுகளும் நுகர்வோருக்கு நம்பிக்கை திரும்பியதைக் காட்டுகின்றன, மேலும் இந்த ஆண்டு முழுவதும் ரூபாய் வலுவடைந்து வருகிறது. மேலும் பங்குச் சந்தை விலைச் சுட்டெண் மிகவும் நேர்மறையாக இருப்பதை நீங்கள் காணலாம். எனவே நுகர்வு அதிகரிப்பதால் தேவை இப்போது அதிகரித்து வருகிறது.” எனவே ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார மீட்சியைக் காணலாம், அது தொடரும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

Exit mobile version