Site icon Tamil News

ஜெர்மனியில் சாரதி அனுமதி பத்திரம் பெற முடியாமல் கடும் நெருக்கடியில் வெளிநாட்டவர்கள்

ஜெர்மனியில் வெளிநாட்டவர்கள் சாரதி அனுமதி பத்திரம் பெற முடியாமல் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கு எழுத்து மூலமான பரீட்சையில் தோற்றுகின்றவர்களில் அநேகமானவர்கள் தோல்வி அடைவதாக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதற்கான எழுத்து மூலமான பரீட்சைகளில் பங்கு பற்றுகின்றவர்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த பரீட்சையில் தேர்வது குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது 2010 ஆம் ஆண்டு எழுத்து மூலமான பரீட்சையில் தேர்வு பெறாதவர்களின் சதவீதம் 37 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 2023 ஆம் ஆண்டு எழுத்து மூலமான சாரதி அனுமதி பத்திர பரீட்சையில் தேர்ச்சி அடையாதவர்களின் சதவீதமானது 45 ஆக காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சாரதி அனுமதி பத்திரத்தின் எழுத்து மூலமான பரீட்சையில் தேர்ச்சி பெறாமைக்கு முக்கிய காரணமான பல வெளிநாட்டவர்கள் இந்த நாட்டினுடைய ஜெர்மன் மொழியில் சிறந்து காணப்படாததால் எழுத்து மூலமான பரீட்சைக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளதாக கருதப்படுகின்றது.

மேலும் எழுத்து மூலமான பரீட்சைக்கு மேலதிகமான கேள்வி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் போக்குவரத்தில் கடுமையான சில விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாலும், எழுத்து மூலமான வாகன சாரதி அனுமதி பத்திரத்தின் பரீட்சையில் தேர்ச்சியடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version