Site icon Tamil News

ஜெர்மனியில் கட்டாய திருமணம் அதிகரிப்பு – சிறுவர்கள் பாதிப்பு

ஜெர்மனியில் ஜெர்மனியில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு கட்டாய திருமணங்களை செய்து வைக்கும் நடவடிக்கையானது அதிகரிகத்துள்ளது.

ஜெர்மனியின் கட்டாய திருமணம் செய்பவர்களுக்கு எதிரான ஆபேட்ரைசுவன் ரைறாட் என்று சொல்லப்படுகின்ற அமைப்பு தனது புள்ளி விபரத்தில் தெரிவித்துள்ளது.

இவ்வகையான சம்பவங்கள் பேர்ளினில் அதிகரித்துள்ளதாக குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டு இவ்வாறு பேர்ளினில் 196 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. கட்டாய திருமணத்திற்கு வற்புறுத்துவது மற்றும் கட்டாய திருமணத்திற்கு ஏற்படுகளை செய்வது தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது.

கட்டாய திருமணம் செய்கின்றவர்களில் 94 சதவீதமான பெண்களாக உள்ளதாகவும், 5 சதவீதமானவர்கள் ஆண்களாக உள்ளதாகவும்1 சதவீதமானவர்கள் பெற்றோரின் விருப்பம் இன்றி திருமணங்களை செய்து கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.

10 வயதுக்கும் 12வயதுக்கும் இடைப்பட்டவர்கள் கட்டாய திருமணத்திற்குள்ளாகிய 9 பதிவுகள் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

38 சதவீதமான சம்பவங்கள் 16 வயதுக்கு மேற்பட்டவர்களின் திருமணமாக தெரியவந்துள்ளது.

மேலும் கட்டாய திருமணத்திற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version