Site icon Tamil News

ஐரோப்பாவுக்கு புகலிட கோரிக்கையாளர்களை கடத்தும் கும்பல் அதிரடி கைது

ஐரோப்பாவுக்கு புகலிட கோரிக்கையாளர்களை கடத்தும் எகிப்து, ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த 21 பேர், கொண்ட கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

ஒரு பெரிய கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக சட்ட அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வலையமைப்பு பெலாரஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்து வடக்கு பால்டிக் பாதை வழியாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் குடியேறியவர்களை கடத்தியுள்ளது.

Operation Task Force Flow II என்று அழைக்கப்படும் இந்த கைது நடவடிக்கைக்கு யூரோபோல் பொலிஸார் தலைமை தாங்கியுள்ளனர்.

மேலும் பின்லாந்து, ஜெர்மனி, லிதுவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் முக்கிய நபர்களை கைது செய்தார்.

24 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, அதிகாரிகள் சட்டவிரோதமான பொருட்களையும் கைப்பற்றினர்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட தங்க நகைகள், தகவல் தொடர்பு அல்லது கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படும் மின்னணு உபகரணங்கள், சட்டவிரோத குடியேற்றத்தை எளிதாக்குவதற்கான போலி அடையாள ஆவணங்கள், நடவடிக்கை தொடர்பான பல்வேறு ஆவணங்கள், சட்டவிரோத வர்த்தகத்திற்கான போலி சிகரெட்டுகள் மற்றும் அதற்கு மேல் பணமாக 80,000 யூரோ ஆகியவை கண்டுபிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version