Site icon Tamil News

யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல : புடினுக்கு எதிரான கைது நடவடிக்கை குறித்து ஓலாஃப் ஸ்கோல்ஸ் கருத்து!

ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், பல தலைவர்கள் ஐ.சி.சியின் முடிவை வரவேற்றுள்ளனர்.

உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தி ரஷ்ய தலைவர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐ.சி.சி குற்றம் சாட்டி, பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளதுடன்,  இந்த வாரண்ட் மூர்க்கத்தனமானது , அர்த்தமற்றது என்று கிரெம்ளின் கூறியது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஐ.சி.சியின் முடிவை வரவேற்றுள்ளார். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை இது காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க்குற்றங்களை விசாரிக்க சரியான நிறுவனம். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதுதான் உண்மை. அதுதான் இப்போது தெளிவாகிறது என்று ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் டோக்கியோவில் நடந்த கூட்டு செய்தி மாநாட்டில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version