Site icon Tamil News

மதுரை வந்தடைந்த வைகை நீருக்கு பூத்தூவி வரவேற்பு

மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை கள்ளழகர் புறப்பாடு நடைபெற்று நாளை மறுநாள் கள்ளழகர் எதிர்சேவை நடைபெற்ற பின்னர் 5ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து கடந்த 30 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனையடுத்து 30 ஆம்தேதி முதல் இன்றுவரை 750கன அடி நீரும்,நாளை முதல் 5 ஆம் தேதி வரை 500 கன அடி நீரும் திறக்கப்படவுள்ள நிலையில் இன்று திறக்கப்பட்ட நீரானது மதுரை மாநகரில் கள்ளழகர் எழுந்தருளும் பகுதிக்கு வந்தடைந்தது.

குண்டோதரன் வேடம் அணிந்து வைகை அணையை வரவேற்கும் விதமாக மலர் தூவியும் வைகை ஆற்றை போற்றி வைகை நதி ஆரத்தி பாடல் பாடியும் ஏராளமான பொதுமக்கள் வரவேற்றனர்.

முன்னதாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்த கிணற்றிலிருந்து புனித நீரை எடுத்து வைகை ஆற்றில் தெளித்தும்,சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனை செய்து நீரை வரவேற்றனர்.

இதில் வைகை நதி மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்,சமுக ஆர்வலர்கள்,பெண்கள்,சிறுமிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

Exit mobile version