Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் வெள்ள அச்சம் – மெல்போர்னில் நீர் அமைப்பை சீரமைக்க நடவடிக்கை

விக்டோரியா மாநில அதிகாரிகள் மெல்போர்னில் ஏற்பட்ட வெள்ளத்தை கட்டுப்படுத்தும் வகையில் நீர் அமைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சுமார் 500 வீடுகள் முற்றிலும் நீரில் மூழ்கின.

பேரிடர் எச்சரிக்கை சமிக்ஞைகள் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயேச்சைக் குழுவை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி தற்போது 15 பரிந்துரைகள் அடங்கிய குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விக்டோரியா மாநிலம் முழுவதும் புதிய குழாய்கள் அமைப்பது தொடர்பான புதிய மாதிரியும் உரிய பரிந்துரைகளுக்கு இணங்க முன்வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதன்மூலம் பேரிடர் சூழ்நிலைகள் ஏற்படும் முன் பொதுமக்கள் துல்லியமான தகவல்களைப் பெற முடியும்.

06 மணித்தியாலங்களுக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில், சரியான தகவல் பரிமாற்றத்தை முறைப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் பழைய குழாய் அமைப்பில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version