Site icon Tamil News

இத்தாலி நோக்கி சென்ற விமானம் – நடுவானில் ஏற்பட்ட பரபரப்பு

United Airlines விமானம் 8 நிமிடங்களில் 28,000 அடி (8,534 மீட்டர்) உயரம் இறங்கிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி (New Jersey) மாநிலத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் காற்றழுத்தப் பிரச்சினை ஏற்பட்டது.

அது இத்தாலியின் ரோம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. 37,000 அடி உயரத்தில் பறந்த விமானம், 8 நிமிடங்களில் 9,000 அடிக்கும் குறைவான உயரத்துக்கு இறங்கியது.

காற்று அழுத்தத்தில் பிரச்சினை ஏற்படும்போது விமானம் விரைவாகத் தரையிறக்கப்படும். அது மீண்டும் நியூ ஜெர்ஸி விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்தது. விமானத்தில் 270 பயணிகளும், 14 சிப்பந்திகளும் இருந்தனர்.

பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதும், பயணிகள் அனைவரும் மற்றொரு விமானத்துக்கு மாற்றப்பட்டதாக United Airlines தெரிவித்துள்ளது.

Exit mobile version