Site icon Tamil News

விலங்குகள் தொடர்பின்றி அமெரிக்காவில் முதல் பறவைக் காய்ச்சல் பாதிப்பு

விலங்குகள் தொடர்பின்றி அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பாதிப்பு அமெரிக்காவில் ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று அந்நாட்டு அதிகாரிகள் செப்டம்பர் 6ஆம் திகதியன்று தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் அவர் ஆகஸ்ட் 22ஆம் திகதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அமெரிக்க நோய் தடுப்பு, கட்டுப்பாடு மையம் கூறியது.அவருக்கு இன்ஃபுளுவென்சா காய்ச்சல் ஏற்பட்டதாக அறியப்படுகிறது.

சிகிச்சை பெற்றதும் குணமடைந்து அவர் வீடு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் சந்தேகப்படும்படி இருந்ததால் கூடுதல் பரிசோதனைக்காக அவரது ரத்த மாதிரி மாநில, கூட்டரசு ஆராய்ச்சிக்கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அவருக்கு எச்5 கிருமி, அதாவது பறவைக் காய்ச்சல் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது.அவர் 2024ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14வது நபர்.ஆனால் விலங்குகள் தொடர்பின்றி அந்நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர்.

“மிசோரியில் உள்ள கால்நடைப் பண்ணைகளில் எச் 5 கிருமித்தொற்று பாதிப்பு இல்லை. சில பறவைகளுக்கு மட்டும் அந்தப் பாதிப்பு இருந்ததாகத் தெரியவந்துள்ளது,” என்று மிசோரி சுகாதாரத்துறை தெரிவித்தது.

Exit mobile version