Site icon Tamil News

ஃபயர் படத்தில் கவர்ச்சி கன்னியாக களமிறங்கிய ரச்சிதா மகாலட்சுமி

நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள ‘ஃபயர்’ படத்தில் இருந்து, கிலிம்ஸி வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளது படக்குழு.

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரச்சித்தா மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடினார்.

இவரது விவாகரத்து சர்ச்சை ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, வெள்ளித்திரையில் கவர்ச்சி நாயகியாக அவதாரம் எடுத்துள்ளார்.

ஜே எஸ் கே இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ், ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரச்சித்தா மகாலட்சுமி ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார். மேலும் இந்த அப்படத்தில், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம் புலி, பேட்மேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் இறங்கி நடித்துள்ளார் ரச்சித்தா மகாலட்சுமி.

ரச்சிதா மகாலட்சுமியா இப்படி என சிலர் அதிர்ச்சி கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள்.

 

Exit mobile version