Site icon Tamil News

ஷுஹைப் மாலிக்கின் மனைவி சனாவை கேலி செய்த ரசிகர்கள்

இஸ்லாமாபாத் – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷுஹைப் மாலிக்கிற்கு ஆதரவாக மைதானத்திற்கு வந்த நடிகையும் மனைவியுமான சனா ஜாவேத் மீது ரசிகர்கள் கேலி செய்தனர்.

பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது கணவர் ஷுஹைப் மாலிக்கிற்கு ஆதரவாக மைதானத்திற்கு வந்த சனா ஜாவேத், ‘சானியா அழைப்புகள்’ மூலம் ரசிகர்களால் கேலி செய்யப்பட்டார்.

ஷுஹைப் மாலிக்கின் கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போட்டி முடிந்து சனா வெளியேறும் போது, ரசிகர்கள் சத்தமாக சானியா மிர்சா என கோஷமிட்டனர். இதனால் கொதிப்படைந்துள்ளார் பாகிஸ்தான் நடிகை சனா.

அதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்திய டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சாவுடனான ஷுஹைப் மாலிக்கின் திருமணம் சமீபத்தில் முறிந்தது.

இதைத் தொடர்ந்து ஷுஹைப் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.

Exit mobile version