Site icon Tamil News

ஜூலை 03 ஆம் திகதி உலகிலேயே அதிக வெப்பமான நாளாகப் பதிவானது

அண்மைக்கால வரலாற்றில் உலகின் மிக வெப்பமான நாளாக கடந்த ஜூலை 03ம் திகதி பதிவுகளில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஜூலை 3ஆம் திகதி, உலகின் சராசரி வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் சராசரி வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாக உயர்ந்திருப்பது இதுவே முதல்முறை என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குப் பிறகு பதிவான அதிகபட்ச வெப்பநிலை இந்தப் புதிய சாதனை என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் முன்னறிவிப்புக்கான அமெரிக்க தேசிய மையத்தின்படி, ஆகஸ்ட் 2016 இல் உலகின் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 16.9 டிகிரி செல்சியஸ் ஆகும்.

இதற்கிடையில், கடந்த ஜூன் மாதமும் இதுவரை உலகிலேயே அதிக வெப்பமான மாதம் என்ற சாதனையில் இணைந்துள்ளது.

இயற்கையான காலநிலை நிகழ்வுகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தின் விளைவாக உலக வெப்பநிலை அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Exit mobile version