Tamil News

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஆராத்தி பூர்ணிமா … யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனுக்கான 18 போட்டியாளர்களை விஜய்டிவி தட்டி தூக்கியுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது துவங்கியுள்ளது.

கூல் சுரேஷ் அவர்களை தொடர்ந்து பிரபல நடிகை பூர்ணிமா ரவி இரண்டாவது போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

பூர்ணிமா ரவி என்றால் சட்டென்று பலராலும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது, ஆனால் ஆராத்தி பூர்ணிமா என்று கூறினால் அனைவருக்கும் சட்டென்று அடையாளம் தெரிந்துவிடும். அந்த அளவிற்கு ஒரு பிரபலமான யூடியூபர் தான் பூர்ணிமா ரவி.

தனது youtube சேனல்கள் மூலமாக போல்டான பல வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி உள்ளதால் அவருடைய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே யூடியூப் பிரபலங்கள் சிலர் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பூர்ணிமா ரவி ஒரு சிறந்த போட்டியாளராக திகழ்வார் என்று கருதப்படுகிறது.

Exit mobile version