Tamil News

சந்திரமுகியின் கதவுகள் திறக்கப்படுகின்றன…. எப்போது தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்களில் சந்திரமுகியும் ஒன்று. சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு பி. வாசு இயக்கத்தில் வெளியான “சந்திரமுகி” பெரிய அளவில் சூப்பர் ஸ்டாருடைய ஸ்டைல் இல்லாமல் வெளியான திரைப்படம். ஆனால் அவருடைய திரை வரலாற்றில் மாபெரும் வசூலை கண்ட படங்களில் அதுவும் ஒன்று. கடந்த 1993ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “மணிசித்ரதாழு” என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் சந்திரமுகி திரைப்படம். இந்நிலையில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வாசு, பிரபல நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சந்திரமுகியாக கங்கானா ரனாவத் நடிக்க, முக்கிய வேடங்களில் வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற “விநாயகர் சதுர்த்தி” திருநாள் அன்று வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தற்போது தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தில் இருந்து ஒரு போஸ்டர் ஒன்றையும் அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதை ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரிலும் பதிவேற்றியுள்ளார். மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகிறது!
Exit mobile version