Site icon Tamil News

பங்களாதேஷில் ஊரடங்கு நீட்டிப்பு : நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கும் அதிகாரிகள்!

பங்களாதேஷ் அதிகாரிகள் இன்று (21.07)  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளனர்.

நாட்டின் உச்ச நீதிமன்றம் சிவில் சர்வீஸ் பணியமர்த்தல் ஒதுக்கீட்டில் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1971 இல் பங்களாதேஷின் சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் உறவினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30% வரை ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீடு முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் – முக்கியமாக மாணவர் குழுக்களால் முன்னனெடுக்கப்பட்டன.

இது சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த போராட்டம் கலவரமாக  மாறியதில் குறைந்தது 103 பேர் இறந்ததாக அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அதிகாரிகள் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் அதிகாரப்பூர்வ  எண்ணிக்கைகளை பகிர்ந்து கொள்ளவில்லை.

அந்த வாரத்தில், தெருக்களிலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் நிரம்பியிருந்த கல் எறியும் போராட்டக்காரர்களை சிதறடிப்பதற்காக பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசினர் மற்றும் புகை குண்டுகளை வீசினர்.

தலைநகர் டாக்காவின் சில பகுதிகளில் ஆங்காங்கே மோதல்கள் சனிக்கிழமை பதிவாகியுள்ளன, ஆனால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

Exit mobile version