Site icon Tamil News

பிலிப்பைன்ஸில் மயோன் எரிமலைக்கு அருகில் உள்ள குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை!

பிலிப்பைன்ஸின் மயோன் எரிமலைக்கு அருகில் உள்ள குடியிருப்பாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  மயோன் பள்ளத்தின் 6-கிலோமீட்டர் (3.7-மைல்) சுற்றளவில் உள்ள பகுதி ஆபத்தான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த பகுதயில் பல ஏழை கிராமவாசிகள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையிலேயே அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர ஆபத்து வலயத்திலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும், நெருக்கடி முடியும் வரை இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவி வழங்குவதாக உறுதியளித்ததாகவும் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்தார்.

Exit mobile version