Site icon Tamil News

கிறிஸ்துமஸ் காலத்தில் பெரும் ஆபத்தை சந்திக்கும் ஐரோப்பிய நாடுகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் ஐரோப்பா “பயங்கரவாத தாக்குதல்களின் பெரும் ஆபத்தை” எதிர்கொள்வதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகே நடந்த ஒரு பயங்கரமான தாக்குதலை தொடர்ந்து பிரெஞ்சு புலனாய்வாளர்கள்  மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

“இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் மற்றும் அது நமது சமூகத்தில் ஏற்படுத்தும் துருவமுனைப்பு, வரவிருக்கும் விடுமுறை காலத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பயங்கரவாத தாக்குதல்களுக்கான  மிகப்பெரிய ஆபத்து உள்ளது” என்று ஐரோப்பிய ஒன்றிய உள்துறை ஆணையர் யில்வா ஜோஹன்சன் கூறியுள்ளார்.

இதானல்   குறிப்பாக வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஐரோப்பிய ஆணையம் கூடுதலாக 30 மில்லியன் யூரோக்களை ($32.5 மில்லியன்) வழங்கும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version