Site icon Tamil News

டொனால்ட் ட்ரம்ப்பை நேர்காணல் செய்யவுள்ள எலான் மஸ்க்!

முன்னாள் அமெரிக்க அதிபர் மற்றும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப்பை நேர்காணல் செய்கிறார் எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க். இது குறித்து தொடர்ச்சியாக பல்வேறு ட்வீட்களை மஸ்க் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளது, “முழுவதும் இது ஸ்கிரிப்ட் செய்யப்படாத உரையாடலாக இருக்கும். இதில் எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது. அதனால் நிச்சயம் இதில் பொழுதுபோக்கு அம்சத்துக்கு உத்தரவாதம் தர முடியும். பயனர்கள் தங்களிடம் இருக்கும் கேள்விகளை போஸ்ட் செய்யலாம்.

எக்ஸின் ஸ்பேசஸில் நேரலையில் இந்த உரையாடல் ஒலிபரப்பாகும். இதற்கு முன்பாக நான் சில சோதனைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது” என அந்த ட்வீட்களில் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி அளவில் இந்த உரையாடல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு தனது ஆதரவை மஸ்க் வழங்கியுள்ளார். அதேநேரத்தில் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸுக்கு பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் போன்ற பகுதிகளில் ஆதரவு அதிகரித்துள்ளது. தற்போதையை நிலவரப்படி அதிபர் தேர்தல் ரேஸில் ட்ரம்ப்பை கமலா ஹாரிஸ் முந்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Exit mobile version