Site icon Tamil News

கிரீஸை தாக்கிய தூசுப் புயல் – செம்மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் நகரங்கள்

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸின் ஏதென்ஸ் நகரில் தூசுப் புயல் படிந்து வருகிறது.

வட ஆப்ரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்திலிருந்து கிளம்பும் தூசு புயல் சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரத்தில் கிரீஸின் ஏதென்ஸ் நகரில் படிந்து வருகிறது.

இந்த தூசால் அந்த நகரம் செம்மஞ்சள் நிறத்தில் காட்சியளித்ததோடு, காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சஹாரா பாலைவனம் ஆண்டிற்கு 60 முதல் 200 மில்லியன் டன் அளவுக்கு தாதுக்கள் அடங்கிய தூசை வெளியிடும் எனவும், இதில் பெரும்பாலானவை அருகாமை பகுதியிலேயே படியும் நிலையில் சில தூசு மண்டலமே மட்டுமே வெகுதூரத்திற்கு பயணிக்கிறது.

வெப்பமான தூசு புயலால் கடந்த 24 மணி நேரத்தில் 25 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

Exit mobile version