Site icon Tamil News

மத்திய கிழக்கில் பதற்ற்த்தை ஏற்படுத்த வேண்டாம் ; ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுமே பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகஸ்ட் 6ஆம் திகதி வலியுறுத்தியுள்ளார்.

“இந்த மோதலை யாரும் பெரிதாக்க வேண்டாம். நட்பு, பங்காளி நாடுகளுடன் நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம். அந்தச் செய்தியை நேரடியாக ஈரானுக்கு தெரிவிப்போம். இஸ்ரேலுக்கும் தெரிவித்தோம்,” என்று செய்தியாளர்களிடம் திரு பிளிங்கன் கூறினார்.

ஈரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேயை இஸ்ரேல் படுகொலைச் செய்துவிட்டதால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேலை பழி தீர்க்க துடியாய் துடித்து வருகிறது.

எந்த நேரத்திலும் இஸ்ரேல் மீது அது தாக்குதலை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஹனியே கொல்லப்பட்டதால் இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

பத்து மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா, சமரசப் பேச்சில் தீவிரம் காட்டி அதில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதால் அம்முயற்சிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

“இஸ்ரேலைப் பாதுகாக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். பயங்கரவாத, அதன் தொடர்பான அமைப்புகளிலிருந்து இஸ்ரேலைத் தொடர்ந்து பாதுகாப்போம்,” என்று பிளிங்கன் தெரிவித்தார்.ஆனால் வட்டாரத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் மேலும் தாக்குதலில் ஈடுபட்டால் அனைவருக்கும் நிலைத் தன்மை, பாதுகாப்பு பாதிக்கப்படும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

மேரிலாண்ட் அன்னாபோலிசில் உள்ள அமெரிக்க கடற்படை பயிற்சி நிலையத்தில் ஆஸ்திரேலிய வெளியுறவு, தற்காப்பு அமைச்சர்களைச் சந்தித்த பிறகு பிளிங்கன் செய்தியாளர்களிடம் பேசினார்.

Exit mobile version