Site icon Tamil News

வேங்கை வயல் வழக்கில் இரண்டாவது கட்டமாக 10 பேருக்கு டி என் ஏ பரிசோதனை..?

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் இரண்டாவது கட்டமாக 10 பேருக்கு டி என் ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு நிலையில் 10 பேரும் ஆஜராகி டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர்.

முதல் கட்ட டி.என்.ஏ பரிசோதனைகளும் மூன்று பேர் மட்டுமே டி என் ஏ பரிசோதனை செய்து கொண்டனர் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்துவிட்டனர்.

வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் 147 நபர்களும் விசாரணை செய்து அதில் 139 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முதல் கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி பெற்றனர். இரண்டாவது கட்டமாக 10 பேருக்கு dna பரிசோதனை செய்வதற்கு அனுமதி பெற்றனர்.

வேங்கை வயல் வழக்கில் இரண்டாவது கட்ட டிஎன்ஏ பரிசோதனைக்கு பத்து பேருக்கு அழைப்பானை அனுப்பப்பட்ட நிலையில் இறையூர் முத்துக்காடு வேங்கை வயல் ஆகிய கிராமங்களை சேர்ந்த 10 பேர் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்தனர்.
அவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது.

முதல் கட்ட டிஎன்ஏ பரிசோதனைக்கு அழைப்பானை அனுப்பப்பட்ட 11 பேரில் இறையூர் முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் தங்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர்.

வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள் நீதிமன்ற உத்தரவுபடி அவர்களுக்கு மீண்டும் டிஎன்ஏ பரிசோதனைக்கு வருவதற்கு அழைப்பானை அனுப்பப்படும் என்று தகவல் உள்ளது ஆனால் டிஎன்ஏ பரிசோதனை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version