Site icon Tamil News

அமெரிக்காவில் விவாகரத்து வழக்கில் அதிருப்தி – நீதிபதிக்கு நேர்ந்த கதி

அமெரிக்காவில் ஆண்ட்ரூ வில்கின்ஸன் என அழைக்கப்படும் நீதிபதியை அவரது வீட்டின் முன் சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 52 வயது நீதிபதி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

மேரிலேண்ட் (Maryland) நகர பொலிஸ் அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தேடப்படும் சந்தேக நபர் 49 வயது பெட்ரோ அர்கோட்டேயிடம் (Pedro Argote) ஆபத்தான ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அர்கோட்டேயின் விவாகரத்து வழக்கில் பிள்ளைகளை வளர்க்கும் உரிமை அவரது மனைவிக்கு வழங்கப்பட்டதால் அதிருப்தியடைந்து அவர் நீதிபதியைச் சுட்டதாக நம்பப்படுகிறது.

Exit mobile version