Site icon Tamil News

பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்!! வைத்தியசாலைகளுக்கு களமிக்கப்பட்ட படையினர்

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அரச வைத்தியசாலைகளின் சிறு ஊழியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளை இடையூறு இன்றி நடத்துவதற்காக இராணுவப் படையினரை சுகாதார அமைச்சு ஈடுபடுத்தியுள்ளது.

இதன்படி, மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதிகளின் மேற்பார்வையில் கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, கராப்பிட்டி, மஹ்மோதர, பேராதனை மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலை, மாத்தறை, பலாங்கொடை, எஹெலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, கம்பளை, மீரிகம ஆகிய வைத்தியசாலைகள் நாளாந்தம் இடையூறு இல்லாமல் இயங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​அந்த மருத்துவமனைகளின் தேவைக்கு ஏற்ப, 500க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், அவசரநிலை ஏற்பட்டால், தேவையான படைகளை அனுப்புவதற்கு தயார் செய்து, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், ராணுவ தளபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

தொழில்சார் நடவடிக்கைகள் காரணமாக தமது அன்றாட நடவடிக்கைகளை எவ்வித இடையூறும் இன்றி மேற்கொள்ளுமாறு லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பாதுகாப்பு படைத் தளபதிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Exit mobile version