Site icon Tamil News

ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த சூன் பான் வியாபாரிக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அச்சுறுத்தும் வகையில் முகநூல் பதிவை பதிவேற்றம் செய்து பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 19 வயதான ‘சூன் பான்’ விற்பனையாளரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் செப்டம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 07 ஆம் திகதி தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவிருந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இராணுவ முகாமில் இருந்து டி-56 ஆயுதத்துடன் தப்பிச் சென்ற எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் இராணுவ சிப்பாய் ஒருவருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி எப்பாவல பிரதேசத்திற்கு ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ள விஜயத்திற்கு முன்னதாக, துப்பாக்கிதாரியை வீரரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version