Site icon Tamil News

ஐ.நா பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிநீக்கம் : மனிதாபிமான உதவிகள் தடைப்படும் அபாயம்!

ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனத்தில் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலில் அவர்கள் பங்கு பெற்றதாக இஸ்ரேல் குற்றம் சாட்டிய நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. நிவாரண மற்றும் பணி முகமை அல்லது UNRWA பணியாளர்கள், இதற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற “செய்திகளால் திகிலடைந்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை பரிந்துரைக்குமாறும்  ஏஜென்சியின் தலைவரை வலியுறுத்தினார்.

இந்த நடவடிக்கையானது காசா பகுதி, ஜோர்டான், லெபனான், சிரியா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய அகதிகளுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பை வழங்கும் விடயத்தில் ஒரு கரும்புள்ளியாக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காசாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போர் தொடங்கியதில் இருந்து நிறுவனம் வழங்கி வரும் உயிர்காக்கும் உதவியை நம்பியிருப்பதால் இந்த அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு பாதகமான நிலையை தோற்றுவிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version