Tamil News

நீரின் தரத்தில் குறைப்பாடு : பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இந்த கோடைக்காலம் மக்களுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக குடிநீர் பிரச்சினை தோன்றியுள்ளது. அதாவது, குடிநீரின் தரம் குறித்த பிரச்சினை எழுந்துள்ளது.

சண்டர்லேண்டில் (Sunderland ) நடந்த டிரையத்லான் (triathlon ) போட்டியில் டஜன் கணக்கான விளையாட்டு வீரர்கள் நோய்வாய்ப்பட்டதை அடுத்து இந்த பிரச்சினை பூதாகரமாக மாறியுள்ளது.

டைன் அன்ட் வேர் ( Tyne and Wear city) நகரின் கடற்கரையில் கடலில் நீந்திய குறைந்தது 57 பேர் நோய்வாய்ப்பட்டு வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடலில் கழிவு நீர் கலக்கப்படுவதே பிரதான காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல மாதங்களாக முறையிடப்பட்டிருந்தாலும், அதனுடைய தாக்கம் தற்போதுதான் உணரப்படுகிறது.

ஆகவே இந்த கோடைக்காலத்தில் கடலில் குளிக்கச் செல்பவர்கள், நீரை தெரியாமலேனும் குடித்துவிட வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்படி  இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் இந்த விடயத்தில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version