Site icon Tamil News

பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய காலக்கெடு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்த நிலையில், துணை இராணுவ படையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 152 போலீசார் காயம் அடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். வன்முறை தொடர்பாக 2800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும்  கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய அதிகாரிகளுக்கு 72 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version