Site icon Tamil News

சிங்கப்பூரில் வங்கிகளில் பணம் வைத்திருப்போர் தொடர்பில் வெளியான தகவல்

சிங்கப்பூரில் வங்கிகளில் பணம் வைத்திருப்போர் 89 சதவீதத்திற்கும் அவர்கள் போட்ட பணத்துக்குக் காப்புறுதி உள்ளதென வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் வைப்புத்தொகைக் காப்புறுதித் திட்டம் வங்கிகளுக்கும், நிதிநிறுவனங்களுக்கும் காப்புறுதி தருகிறது.

அதன்படி காப்புறுதி பெற்றுள்ள வங்கியோ, நிதிநிறுவனமோ நொடித்துப்போனால் அதில் முதலீடு செய்த பொதுமக்களுக்கு அவர்கள் போட்ட பணத்தில் அதிகபட்சம் 75,000 வெள்ளிவரை கொடுக்கப்படும்.

வைப்புத்தொகைக் காப்புறுதி நிதியில் போதுமான பணம் இருப்பதாகத் ஆல்வின் டான் உத்தரவாதம் தந்தார்.

நிதியின் இலக்கு 690 மில்லியன் வெள்ளி எனவும் நிதிச் சொத்து மதிப்பு சுமார் 570 மில்லியன் வெள்ளி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version