Site icon Tamil News

இந்தியாவில் பரவிய ஆபத்தான m-pox! ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் முறை

இந்தியா, குரங்கம்மை எனும் m-pox நோய் மிக ஆபத்தான Clade 1B தொற்று ஒருவருக்குத் தொற்றியிருப்பதை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் அந்த வகை ஒருவருக்கு தொற்றியதாகப் பதிவாகியிருப்பது இது முதன்முறையாகும்.

ஆப்பிரிக்காவுக்கு வெளியே, புதிய ரக வைரஸ் பரவியுள்ள மூன்றாம் நாடு இந்தியாவாகும்.

m-pox நோயின் புதுவகை வைரஸ் தொற்றியவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதுடையவராகும்.

அவர் அண்மையில் ஐக்கிய அரபுச் சிற்றரசுக்குச் சென்றிருந்தார். அவரின் உடல்நலம் தற்போது சீராக உள்ளது.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் விமானத்தில் ஒன்றாகப் பயணம் செய்தவர்களையும் அதிகாரிகள் அணுக்கமாகக் கண்காணிக்கின்றனர்.

கடந்த சுமார் ஈராண்டில் m-poxஇன் பழைய Clade-2 ரக வைரஸ் 30 பேர் பாதிக்கப்பட்டதாகவும் ஒருவர் பலியானதாகவும் இந்தியா கூறியிருந்தது.

Exit mobile version