Site icon Tamil News

உலக தலைவர்கள் வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ள சாதனை!

பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களில் யூடியூப் வலைதைளத்தில் அதிக பார்வையாளர்களை கொண்ட முதல் தலைவராக மாறி சாதனை படைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் வலைதளம் 2 கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது யூடியூப் தளம் 10 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை கொண்டிருந்த நிலையில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இவருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில்  பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரா உள்ளார். இவர் 64 லட்சம் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ளார்.

மூன்றாவது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மனுவல் லோபஸ் ஒப்ராடார் 4.1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ளார். இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடோடோவும் 3.2 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களோடு அடுத்த இடத்தில் உள்ளார்.

1.1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களோடு உக்ரைனியன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மொத்தமாகவே 7 லட்சத்து 94 ஆயிரம் சப்ஸ்க்ரைபர்களை மட்டுமே பெற்றுள்ளார்.

பார்வையாளர்கள் பார்வையிட்ட நிமிடங்களைப் பொறுத்தவரை, மொத்தமாக பிரதமர் மோடியின் யூ டியூப் தளம் 2.24 பில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

நவீன காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அரசியலில் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பதையே இவை காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version