Site icon Tamil News

சட்டவிரோத ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு கியூபா விதித்த தடை ; 17 பேர் கைது

ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் சேர கியூபா தடை விதித்துள்ளது.உக்ரைனுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா கடந்த ஆண்டு போர் தொடுத்தது.

இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ள நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகளான சீன, வடகொரியா போன்றவை செயல்படுகின்றன.

இந்தநிலையில் ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் மற்ற நாட்டவர்களும் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி ரஷ்யாவின் அண்டை நாடான கியூபாவில் சட்ட விரோதமாக ஆட்களை சேர்க்க முயன்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து அந்த நாட்டின் தூதர் ஜூலியோ அன்டோனியோ கார்மென்டியா பெனா கூறுகையில்,`கியூபா நாட்டவர்கள் ரஷ்ய ராணுவத்தில் சட்டப்பூர்வமாக சேர்ந்து பணியாற்றுவதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால் இந்த நெருக்கடியை பயன்படுத்தி பலர் பணம் சம்பாதிக்கின்றனர்.எனவே இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது’ என அவர் தெரிவித்தார்.

Exit mobile version