Site icon Tamil News

கொழும்பு தமிழர்களிடமே உள்ளது – சிங்களவர்கள் இழந்துவிட்டனர் – கொந்தளிக்கும் விமல்

தலைநகர் கொழும்பை சிங்களவர்கள் இழந்துவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெரும்பான்மையாக சிங்களவர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் கொழும்பை இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

“ரணில் தீர்வா? பிரச்சினையா?” என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடத்தப்பட்ட நிகழ்வொன்றிலேயே வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு அடுத்தப்படியாக அதிகளவான தமிழர்கள் வாழும் மாவட்டமாக கொழும்பு இருக்கின்றது.

இதன்படி தலைநகர அதிகாரம் பெரும்பான்மை இனத்தவர்களிடம் அல்லாது சிறுபான்மை இனத்தவர்களிடமே இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இருந்தாலும் பெரும்பான்மை மக்களுக்கு மாரடைப்பு வந்துள்ளதா? அதனை கைப்பற்ற வேண்டும் என்று எண்ணுகின்றனரா? கோயில் தேர்களுக்கு கல் வீசுகின்றனரா? என்றும் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

உண்மையில் தமிழ் மக்கள் எதனையும் கோரவில்லை என்றும், இனவாத, பிரிவினைவாத அரசியல்வாதிகளே மக்களை தூண்டும் வகையில் செயற்படுகின்றனர் என்றும் அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.

Exit mobile version