Site icon Tamil News

கொழும்பு மக்களுக்கு விசேட எச்சரிக்கை! 5 மடங்காக அதிகரித்த ஆபத்து

கொழும்பு மாவட்டத்தில் நுளம்பு பெருக்கம் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கொழும்பு மாநகர சபை, கொதடுவை போன்ற பிரதேசங்களில் நுளம்புகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

நுளம்புகளின் அடர்த்தியைக் கணக்கிடும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற Breteau Index இல் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக Breteau Index மதிப்பு 5% ஆக இருக்க வேண்டும் ஆனால் சில பகுதிகளில் 25% ஆக அதிகரித்துள்ளது என்றார்.

இதன் காரணமாக ஜூன் மாத இறுதிக்குள் கொழும்பு மாவட்டத்தில் அதிக தொற்றுநோய் நிலைமை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version