Site icon Tamil News

ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்கிழமை (18.07) பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்யன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அந்த கலந்துரையாடலின் போது ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வொன்றை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இதன்படி  எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி வழங்கும் தீர்வுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக சாணக்யன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வார இறுதியில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும்  அதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எழுத்துமூல கோரிக்கையையும் விடுத்திருந்தனர்.

Exit mobile version