Site icon Tamil News

இந்தியாவில் செயற்கை மழையை உருவாக்கும் மேக விதைப்பு முறை வெற்றி

மேகங்கள் மீது ரசாயணங்களை தூவி IITகான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக செயற்கை மழையை உருவாக்கி உள்ளனர். 6 ஆண்டுகள் தீவிரமான முயற்சிக்கு பின் இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இதற்காக IITகான்பூரின் விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட செஸ்னா விமானம் 5ஆயிரம் அடி உயரத்திற்கு சென்று ரசாயன பொடியை மேகங்கள் மீது தூவியது. சிறிது தேரத்திற்கு பின்னர் அந்த பகுதிகளில் மழைப்பொலிவு காணப்பட்டது.

சில்வர் ஐயோடைட், பொட்டாஷியம் ஐயோடைட் போன்ற ரசாயனங்கள் பேகத்தின் மீது தூவப்படும் போது மேகத்தில் அதீத குளிர்ச்சி உண்டாகி மழைப்பொழிவு ஏற்படுகிறது.

இதில் ரசாயணங்கள் தூவப்படும் அளவை பொறுத்தும் காற்றின் வேகத்தை பொறுத்தும் மழை அளவு தீர்மானிக்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தை சீனா ஏற்கனவே உருவாக்கி விட்டது. ஆனால் அதை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளாத்தால், மைக விதைப்பு முறை குறித்த ஆராய்ச்சி பொறுப்பை IITகான்பூர் விஞ்ஞானிகள் ஏற்று தற்போது வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளனர்.

Exit mobile version