Site icon Tamil News

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிரான கிரேக்க போராட்டத்தில் வெடித்த மோதல்

வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்கள் நாட்டில் செயல்பட அனுமதிக்கும் திட்டங்களுக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்ட போராட்டக்காரர்களுக்கும் கிரேக்க காவல்துறை க்கும் இடையே மோதல் ஏற்பட்டுளளது.

அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகி கண்ணீர் புகை குண்டுகளை வீசி பதில் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பிற ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய ஏதென்ஸ் வழியாக பிற்பகலில் அமைதியான முறையில் அணிவகுத்துச் சென்றனர்,

அவர்களில் சிலர் “பொதுக் கல்வியை தனியார்மயமாக்க வேண்டாம்!” என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version