Site icon Tamil News

பிரேசிலில் பாறையில் செதுக்கப்பட்ட முகத்தை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்

பிரேசிலில் அமசான் நதியோரம் உள்ள பாறையில் செதுக்கப்பட்ட பழங்கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்த ஓவியத்தில் 2 கண்கள்…ஒரு மூக்கு…வாய்…புன்முறுவல் முதலியவற்றைக் குறிக்கும் சில அம்சங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

அவை 2000 ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறினர்.

அக்காலத்தில் நதியோரப் பாறைகள் மீது மனிதர்கள் ஆயுதங்களைத் தேய்த்து அவற்றை கூர்மையாக்கியிருக்கலாம். அப்போது பாறைகள் மீது ஓவியங்கள் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பிரேசிலில் நூற்றாண்டு காணாத வறட்சியால் நீர் மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. காலத்தால் மறைந்திருந்த அந்த ஓவியம் மீண்டும் வெளியே தெரியவந்துள்ளது.

Exit mobile version