Site icon Tamil News

இந்துப் பெண்ணுக்கு கிறிஸ்தவப் பெயர்: திருமணத்தை நடத்த கோவிலில் மறுப்பு

சென்னை – மணப்பெண்ணின் கிறிஸ்தவ பெயரைக் கூறி திருமணத்தை நடத்த இந்து கோயில் அதிகாரிகளும், பூசாரிகளும் மறுத்துவிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் பனையூரைச் சேர்ந்தவர் கே. கண்ணன் மற்றும் தருவைகுளத்தைச் சேர்ந்த எம். அந்தோணி திவ்யா ஆகியோர் சங்கரராமேஸ்வரர் கோவிலில்   இந்த நெருக்கடியை சந்திக்க நேரிட்டது.

அந்தோணி திவ்யாவின் உறவினர்கள் அவர் இந்து என்று கூறியதாகவும், ஆனால் அவரது பள்ளி வழங்கிய மாற்றுச் சான்றிதழில் அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டதாகவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

சான்றிதழில் கிறிஸ்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் கோயிலுக்குள் திருமணத்தை நடத்தக் கூடாது என்று முன்பே அறிவுறுத்தியிருந்ததாகவும், இருந்த போதிலும் திருமணத்தை நடத்தி வைக்குமாறு கூறியதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனால் இதை அந்தோணி  திவ்யாவின் பெற்றோர் மறுத்தனர்.  திவ்யா கிறிஸ்துவ மேலாண்மைப் பள்ளியில் படித்ததாகவும், அதுதான் அவரது ஒரே கிறிஸ்தவத் தொடர்பு என்றும் அவரது உறவினர் ராஜேந்திரன் கூறினார்.

திவ்யாவின் பெற்றோர் பெயர் முருகன் மற்றும் ரேவதி. எல்லா ஆவணங்களிலும் அவள் ஒரு இந்து. இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவோம் என்றார் ராஜேந்திரன்.

Exit mobile version