Site icon Tamil News

அமெரிக்காவிற்கு எதிராக களமிறங்கும் சீனா : யுவானை உலகமயமாக்க முயற்சி!

அமெரிக்க டொலருக்கு பதிலாக தமது நாட்டின் பண அலகான யுவானை உலகமயமாக்க சீனா முயற்சி செய்து வருகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது பலவீனமடைந்த நாடுகளுக்கு அமெரிக்கா கடனுதவி வழங்கியதன் நிமிர்த்தம் அமெரி்க்காவின் பண அலகான டொலர் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பண அலகாக மாறியது.

தற்போது வரை அந்நிய செலாவணி சந்தையில் மொத்த வரம்பில் 85 சதவீதத்திற்கு அதிகமான இடத்தை அமெரிக்கா டொலர் பிடித்து வைத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு போட்டியாக சீனாவும் களத்தில் இறங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி தமது நாட்டு பண அலகான யுவானை சர்வதேச நாணயமாக மாற்றும் முயற்சியின் பொருட்டு மிகப் பெரிய 24 நிறுவனங்களுடன் சீனா வர்த்தகம் செய்ய தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே அமெரிக்காவிற்கும் – சீனாவிற்கும் இடையில் அரசியல் ரீதியாகஇ பூகோள ரீதியாகவும் போட்டி வலுத்து வருகின்ற நிலையில்  சீனாவின் இந்த புதிய முயற்சி அமெரிக்காவிற்கு தலையிடியாய் அமைந்துள்ளது.

Exit mobile version