Site icon Tamil News

12 ஆண்டுகளில் முதல் முறையாக தென்கொரியா செல்லும் ஜப்பான் பிரதமர்!

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் சமீப காலமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில்,  ஜப்பான் கடற்பகுதியிலும் அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வடகொரியா பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வடகொரியாவை சமாளிப்பதற்காக தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்தின.

இதனையடுத்து,  ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ளார். அங்கு அதிபர் யூன் சுக் இயோலை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

கடந்த 12 ஆண்டுகளில் ஜப்பான் பிரதமர் ஒருவர் தென்கொரியாவுக்கு மேற்கொள்ளும் பயணம் இதுவாகும். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு வர்த்தகம்,  வடகொரியாவின் அணுசக்தி திட்டம் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version