Site icon Tamil News

சேனல் -04 காணொலி : தம்மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து கோட்டாபய விளக்கம்!

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இதே சேனல் ஒளிபரப்பிய முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் முழுமையான பொய்களால் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் வகையில் ஹன்சீர் ஆசாத் மௌலானா,  மற்றும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலிய வெளியிட்ட பொய்யான கருத்துகள் எனவும்,  2015ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலர் பதவியை விட்டு விலகி தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வரை மேஜர் ஜெனரல் சாலேவுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும்  கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் மேஜர் ஜெனரல் சலே சேனல் 4 க்கு அறிவித்த அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சேனல் 4 இன் இந்த சமீபத்திய ஆவணப்படம் பெரும்பாலும் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே அமைகிறது என சுட்டிக்காட்டியுள்ள அவர், யுத்தம் நிறைவடைந்த பின் தான் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version