Site icon Tamil News

அரைமில்லியன் சீன சுற்றுலா பயணிகளை இலக்குவைக்கும் இலங்கை!

இலங்கை கடன்நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்காக சீனாவை சேர்ந்த அரைமில்லியன்  சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரச்செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இது கொவிட்டிற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சீன சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை விட இரண்டுமடங்கு அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா சுற்றுலாப்பயணி ஒருவர் 5000 டொலர் செலவு செய்தாலும் அது சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து சமீபத்தில் கிடைத்த நிதி உதவிக்கு சமன் என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையால் இலங்கையை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்கமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர்,  நவம்பர் மாதம் வரை சீனாவிலிருந்து இலவச சுற்றுலா விசாவை வழங்கும் திட்டமொன்றை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாகவும் கூறினார்.

இலங்கைக்கான விமானசேவைகளை அதிகரிப்பது தொடர்பில் சீன விமானசேவைகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version