Site icon Tamil News

கொள்ளுப்பிட்டியில் சர்ச்சைக்குரிய வாகன விபத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தரின் மகனுக்கு நீதிமன்றம் தண்டனை

2019ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சாகர சரச்சந்திரவுக்குப் பலத்த காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நவிந்து உமேஷ் ரத்நாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது.

இதன்படி, பிரதிவாதிக்கு 2 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த உயர்நீதிமன்றம், அதனை 15 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் உத்தரவிட்டது.

இது தவிர, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் மனைவிக்கு 26 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி 10, 2019 அன்று கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் வீதிச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஆனந்தசாகர சரத்சந்திர பலத்த காயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனான நவிந்து உமேஷ் ரத்நாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

Exit mobile version