Tamil News

8 மாதம் காதல்.. பிரமாண்ட கல்யாணம்.. 15 நாட்களில் பிரிவு!! பிரபல தொலைக்காட்சி ஜோடியின் பரிதாபம்

திருமணம் ஆன 15 நாட்களில் விஜய் டிவி காதல் ஜோடி பிரிந்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விஜய் டிவியில் சமீபத்தில் நிறைவடைந்த சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்த நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் கடந்த 8 மாதங்களாக காதலித்து மார்ச் மாதத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த காதல் ஜோடி திருமணம் முடிந்து 15 நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.

சம்யுக்தாவின் அப்பா தான் தங்களது பிரிவுக்கு காரணம் என்று விஷ்ணுகாந்த் பேட்டியில் அடித்து சொல்லியிருக்கிறார். ஏனென்றால் திருமணத்திற்கு முன்பு குடும்பத்தோடு சேராமல் இருந்தார். ஏனென்றால் இவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருக்கும் போது சம்யுக்தாவின் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதனால் குடும்பமே அவரை விலக்கி வைத்திருந்தனர்.

ஆனால் சம்யுக்தா- விஷ்ணுகாந்த் திருமணம் நடந்த பிறகு அவர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து சேர தொடங்கிவிட்டார். இதனால் அடிக்கடி வீட்டிற்கு வர துவங்கிய சம்யுக்தாவின் அப்பா சின்னஞ்சிறுசுகளின் பிரைவசியை தடுத்திருக்கிறார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட சின்ன சின்ன சண்டையில் கூட மூக்கின் நுழைத்து தேவையில்லாமல் பிரச்சனையை பெரிதாக்கி விட்டு இருக்கிறார்.

அவரால்தான் காதலர்களாக இருந்த இவர்கள் திருமணமான பிறகு எலியும் பூனையும் ஆக மாறி சண்டை போட்டு துவங்கி விட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக போனதால் பேசாமல் பிரிந்து விடலாம் என்ற முடிவில் இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர். இதைப்போன்று சம்யுக்தாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்தை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

விஷ்ணுகாந்தை நம்பி சம்யுக்தா ஏமாந்து விட்டதாகவும் அவருக்கும் 10 வயது வித்தியாசம் இருப்பது திருமணத்திற்கு பிறகு தான் தெரிய வந்துள்ளது.

அது மட்டுமல்ல திருமணம் ஆன பிறகு மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டு குடும்ப சண்டையை வீதிக்கு கொண்டு வந்து விட்டதாகவும் உருக்கமாக பேசியிருக்கிறார். அது மட்டுமல்ல சோசியல் மீடியாவில் விவாகரத்தை குறித்து யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தயவு செய்து யூடியூபர்ஸ் இன்டர்வியூ கேட்டு தொல்லை பண்ண வேண்டாம் என்றும் கோபத்துடன் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

Exit mobile version