Site icon Tamil News

அடையாள அட்டையில்லாமல் வாக்களிக்க முடியாது

வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், செல்லுபடியாகும் விமான அனுமதிப்பத்திரம், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டை, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும்  மதகுருமார்களுக்கு, மதகுரு அடையாள அட்டை இருக்க வேண்டும்.

உங்களிடம் அடையாள அட்டை இல்லை என்றால், உங்களிடம் தற்காலிக அடையாள அட்டை இருக்க வேண்டும்.

இல்லையெனில், தேர்தல் அலுவலகம் வழங்கும் தற்காலிக அடையாள அட்டையைப் பெற வேண்டும்.

செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லை என்றால், உடனடியாக ஏதேனும் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 21ஆம் திகதி காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக 13000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

Exit mobile version