Site icon Tamil News

இலங்கையில் அபாய பகுதிகளில் 300 பாடசாலைகள் – பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இலங்கையில் மண்சரிவு அபாய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை தெரிவித்தது.

அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த பாடசாலைகள் அமைந்துள்ள பகுதியில் அனர்த்தங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்​கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அத்துடன், மண்சரிவு அதி அபாய பகுதிகளில் பல்வேறு அரச நிறுவனங்களும் காணப்படுவதாக அவர் கூறினார்.

இதேவேளை, மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் சுமார் 14,000 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் அதில் 2600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான பிரதேசங்கள் மண்சரிவு அதி அபாய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version