Site icon Tamil News

கண் சொட்டு மருந்து குறித்து கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் கண்களுக்கு பயன்படுத்தப்படும் சொட்டு மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

க்ரோமிலின் கண் சொட்டு மருந்து வகைகள் இவ்வாறு மருந்தகங்களிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மருந்து வகையினால் ஒவ்வாமை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகை கண் சொட்டு மருந்தினை பயன்படுத்தும் போது pseudomonas aeruginosa என்னும் பக்ரீரியாவினால் பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

10 மில்லிலீற்றர் அளவுடைய அனைத்து வகையான க்ரோமிலின் கண் சொட்டு மருந்துகளும் சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த கண் சொட்டு மருந்தினால் பாதிப்பு அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த கண் சொட்டு மருந்தினால் பாரதூரமான நோய் நிலைமைகள் எதுவும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version