Site icon Tamil News

கனடா காட்டுத்தீயினால் அமெரிக்கர்களுக்கு ஆபத்து : மக்களுக்கு எச்சரிக்கை!

கனடாவின் ஆல்பர்ட்டா பகுதியில் ஏற்பட்ட காட்டுதீ தற்போது கிட்டத்தட்ட 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக சுமார் 160 மில்லியன் டொன் கார்பன் இதுவரை வெளியிடப்பட்டுள்ளதாகவும்,  இதனால் அண்டை நாடான அமெரிக்காவின் டெட்ராய்ட்,  சிகாகோ மற்றும் மினியாபோலீஸ் நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் அங்கு வசிக்கும் சுமார் 8 கோடி மக்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றினை சுவாசிப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அவசியமில்லாமல் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version