Site icon Tamil News

நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாத போதிலும், சுனாமி ஆய்வுக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக உடனடியாக அங்கிருந்து நகர வேண்டும் என்று கடற்கரைக்கு அருகிலுள்ள அனைத்து குடியிருப்பாளர்களையும் நியூஸிலாந்து அதிகாரிகள் வலியுறுத்தினர்

இருப்பினும், நிலநடுக்கம் பதிவான ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாட்டிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரியவந்துள்ளது. நியூசிலாந்து நேரப்படி 12.42 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து கடற்கரையில் இருந்து வடகிழக்கே சுமார் 500 மைல் தொலைவில் உள்ள கெர்மடெக் தீவுகளைச் சுற்றி இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் தேசிய அவசரநிலை முகாமை நிறுவனத்தின் ட்வீட்டர் பதிவில், M7.3 அளவில் கெர்மடெக் தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இது நியூசிலாந்தை பாதிக்கக்கூடிய சுனாமியை உருவாக்கியுள்ளதா என்பதை நாங்கள் மதிப்பிடுகிறோம்.

கடற்கரைக்கு அருகில் உள்ள எவரும் நீண்ட அல்லது வலுவான நிலநடுக்கத்தை உணர்ந்தால், உடனடியாக அருகில் உள்ள உயரமான பகுதிக்கு அல்லது உங்களால் முடிந்தவரை நாட்டின் உட்பகுதிக்கு செல்ல வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version