Site icon Tamil News

அமெரிக்க டொலரை மிஞ்சிய யுவான்!

சீனாவின் எல்லை தாண்டிய கட்டணங்களுக்கு யுவான் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் நாணயமாக பதிவாகியுள்ளது.

மார்ச் மாதத்தில் பதிவான அதிகாரத்துவத் தரவுகள் காட்டுகின்றன.

இதற்கு முன்னர் அத்தகைய கட்டணங்களுக்கு அமெரிக்க டாலர் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் மார்ச்சில் 549.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான யுவான் நாணயம் சீனாவின் எல்லை தாண்டிய கட்டணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.

அதற்கு முந்திய மாதம் (பிப்ரவரி) சீனாவின் எல்லை தாண்டிய கட்டணங்களுக்கான யுவான் பயன்பாட்டின் மதிப்பு 434.5 பில்லியன் டொலராக இருந்தது.

கடந்த மாதம் சீனாவின் 48.4 விழுக்காடு எல்லை தாண்டிய கட்டணங்களில் யுவான் நாணயம் பயன்படுத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

Exit mobile version